இன்றிரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், நெல்லை மற்றும் குமரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.