தர்மபுரியில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிரபல பிரியாணி கடைக்குள் புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த ஊழியரை சரமாரியாக வெட்டி கொன்றது. தொடர்ந்து சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் செல்வகுமார் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இன்று அதிகாலை கடலூர் அருகே அதிமுக நிர்வாகி பத்மநாதன் வெட்டிக் கொல்லப்பட்டார். தொடர்ந்து குமரி அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி கொல்லப்பட்டார்.