நகர்ப்புற உள்ளாட்சித் துறைகளில் 3,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். பேரவையில் பேசிய அவர், காலியாக உள்ள அனைத்து பணியிடங்களுக்கும் முறையான வழிமுறைகளை பின்பற்றி, பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார். மேலும், வீதிகளில் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டால் முதல்முறை ₹5000, மறுமுறை பிடிபட்டால் ₹10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்