புவிசார் தகவல்களுடன் ஜிபிஎஸ் முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நிலத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்வோர் சர்வேயர் மூலமாக முன்கூட்டியே அளந்து உட்பிரிவு செய்யும் வகையில் அந்த நிலத்தின் ஜிபிஎஸ் எனப்படும் புவிசார் தகவல்கள் சேர்க்கப்படும். அதில் முதல் கட்டமாக விருதுநகர், நாமக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.