தமிழகத்தில் புதிதாக ஐந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன் உத்தரவில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், விருதுநகர் மற்றும் குமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 58 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் 5 புதிய கல்லூரிகளுடன் சேர்த்து இந்த எண்ணிக்கை 63 ஆக உயர உள்ளது.