தமிழகத்தில் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி முதல் ஐந்து மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நகரின் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.