தமிழ்நாட்டில் பல்வேறு நாடுகள் பங்கேற்கும் விமானப் பயிற்சியை நடத்த இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. இந்திய விமானப்படை தலைமையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ‘தரங் சக்தி’ என்ற விமானப் பயிற்சியை முதற்கட்டமாக கோவை மாவட்டம் சூலூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கேற்க சுமார் 51 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், வங்கதேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட 51 நாடுகளுக்கு விமானப் பயிற்சியில் பங்கேற்க இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.