தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. சூறாவளி காற்று வீசும் என்பதால் மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.