தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னையில் மாலை அல்லது இரவு வேளையில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது.