போதுமான மாணவர் சேர்க்கை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் கடந்தாண்டு செயல்பட்ட 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 2024-25ஆம் கல்வியாண்டில் 442 பொறியியல் கல்லூரிகள், தங்கள் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்திருந்தன. அதில், 433 கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 9 கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படாததால் மூடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.