கடலூரில் சுதன் குமார், அவரது தாய் மற்றும் 10 வயது மகன் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் சங்கர் ஆனந்த் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விசாரணையில் தந்தையை இழந்து வாழ்ந்த தனது தாய் தற்கொலைக்கு சுதன் குமார் தான் காரணம் என்றும் தன்னையும் அனாதை எனக் கூறியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.