தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டி ஆடவர் பிரிவுக்கு பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றதாக தேசிய துப்பாக்கிச் சூடு சங்கம் அறிவித்துள்ளது. துப்பாக்கி சுடுதல் ஷாட் கன் பிரிவில் பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார். பிரித்விராஜ் தொண்டைமான் தலைமையில் 5 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பிரித்விராஜ் தொண்டைமான் புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஆவார்..
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற பிரித்விராஜ் தொண்டை மான் கூறியதாவது, “இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது கனவு. தமிழ்நாடு அரசிடம் பயிற்சிக்காக நிதி உதவி கோரி உள்ளேன். கடந்த முறை நூலிலையில் வாய்பிழந்த நிலையில் தற்போது தகுதி பெற்று இருப்பது மகிழ்ச்சி. பாரிஸ் ஒலிம்பிக்கில் கண்டிப்பாக பதக்கம் பெற கடினமாக உழைப்பேன் என தெரிவித்துள்ளார்.