அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படும் கமலா ஹாரீஸ், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். அவரின் தாயார் ஷியாமளா, மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர். 19 வயதில் படிப்புக்காக அமெரிக்கா சென்ற அவர், அங்கு ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த டொனால்ட் ஹாரீஸை திருமணம் செய்தார். அந்த தம்பதிக்கு பிறந்த 2 மகள்களில் ஒருவரே கமலா ஹாரீஸ்.