அரசு பள்ளிகளில் படித்த உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும். பாடங்கள் வாரியாக 100/100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு 5000 ரூபாய் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.