தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டின் 2ஆவது கூட்டத்தொடர், காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டது. அப்போது, மறைந்த திமுக MLA புகழேந்தி, குவைத் தீ விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில், விஷச் சாராயம் குடித்து பலியானவர்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பின், பேரவையின் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது