தமிழகத்தில் அரசு சார்பில் மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வெளி மாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இன்று முதல் மருத்துவ முகாம் நடைபெறும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்படும். இந்த முகாமில் வெளி மாநில தொழிலாளர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.