தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் 19 சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாட்களாக இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜூலை 13ஆம் தேதி நாளையும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.