தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த வருடம் மேற்கொண்டனர். ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால் அதனை ஈடு செய்யும் வகையில் ஜூலை 20 நாளை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் நாளை இயங்காது. எனவே இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம்.