தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் செயல்பாடு குறித்து கண்காணிக்க, வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் அடங்கிய குழுக்களை அமைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு, அரசு உதவி பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை ஆராய்ந்து எமிஸ் தளத்தில் புகைப்படங்களை பதிவிட அறிவுறுத்தியுள்ளது.