தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் விற்கப்படும். பானிபூரிகளில், புற்றுநோயை வரவழைக்கும் நிறமிகள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து பானிபூரி விற்கும் கடைகளில் ஆய்வு செய்ய அரசு நேற்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்துவரும் அதிகாரிகள், பானிபூரியின் தரம் குறித்து சோதித்து வருகின்றனர்.