டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. 797 மையங்களில், 1,25,726 ஆண்கள், 1,12,501 பெண்கள், 20 மாற்று பாலினத்தவர் என மொத்தம் 2,38,247 பேர் தேர்வு எழுதவுள்ளனர். பொதுஅறிவில் 175 கேள்விகளும், மனத் திறனை சோதிக்கும் வகையில் 25 கேள்விகளும் என 200 கேள்விகள் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.