தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், நவீன வசதிகள் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திராவிட மாடல் ஆட்சியில் மாணவ கண்மணிகள் மகிழ்ச்சி மற்றும் தன்னம்பிக்கை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நவீன வசதிகளால் பயனடைந்த மாணவிகள் பேசும் வீடியோவையும் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.