கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில், மௌனமாக இருப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு, மத்திய அமைச்சர் நட்டா கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பேரிடரின் போது மக்களை காப்பாற்றாமல் அரசும், காவல்துறையும் வேடிக்கைப் பார்த்ததாகக் குற்றஞ்சாட்டிய அவர், இது அரசு நடத்திய படுகொலை என விமர்சித்துள்ளார். மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.