ஆளுநர் ஆர்.என். ரவி, தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின. ஆனால், அந்தப் பதவியில் மத்திய உளவுத்துறை சிறப்பு இயக்குநராக இருந்த ரவிச்சந்திரன் கடந்த 2ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இதுகுறித்து டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சக தரப்பில் கேட்டதாகவும், அப்போது, தமிழக ஆளுநராக சில காலம் தொடரும்படி அவரிடம் கூறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.