சொந்த வீடு கட்டுவோம் என்ற தமிழக மக்களின் எண்ணத்தில், திமுக அரசு மண் அள்ளி போட்டுள்ளதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி கட்டண அளவு உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், மாநகராட்சி முதல் பேரூராட்சி வரை இந்த கட்டண உயர்வு நடைமுறையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஏழை மக்களின் நலன் கருதி, மீண்டும் பழைய கட்டணத்தை நடைமுறை படுத்த வலியுறுத்தியுள்ளார்