தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்களை இன்று காலை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அந்த 13 மீனவர்களுக்கும் யாழ்ப்பாணம் ஊர்காவல்படை நீதிமன்றம் ஜூலை 25ஆம் தேதி வரை நீதிமன்றத் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது.