இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீனவர்கள் 87 பேரையும் 175 படகுகளையும் மீட்டுக் கொண்டு வருமாறும் கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை மட்டும் 250 மீனவர்கள் கைதானதாகவும் முதல்வர் சுட்டிக்காட்டி உள்ளார்.