தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மாநாட்டுக்கான இடத்தேர்வு நடைபெற்று வருவதாக கூறிய அவர், அதற்காக 36 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெறும் என்றார். மதுரை அல்லது சேலத்தில் முதல் மாநாடு நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.