தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு 3 ஆண்டுகளாக வழங்கவில்லை என திமுக எம்.பி. சண்முகம் விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், மத்திய நிதியமைச்சர் தமிழராக இருந்தும், தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். பட்ஜெட்டில் பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், 100 நாள் வேலை நாட்களை உயர்த்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்