நாடு முழுவதும் போதைப்பொருள், கள்ளச்சாராயம் புழக்கம் அதிகரித்து விட்டதாகவும், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனவும் மக்களவையில் விசிக எம்.பி.திருமாவளவன் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த அறிவுரைகளை தமிழ்நாடு முதல்வருக்கு வழங்குங்கள் என கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக, காங்கிரஸ், விசிக எம்பிக்கள் முழக்கமிட்டனர்.