தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாத பட்ஜெட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டுவது ஆச்சரியமளிப்பதாக சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். அண்ணாமலையை முந்த ஆர். என்.ரவி போட்டி போடுவது வெளிப்படையாக தெரிவதாகவும், ஜூலை 31ஆம் தேதி பணி ஓய்வுக்கு பிறகு எங்கேயோ துண்டை போட்டு வைக்கிறார்? எனவும் அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, மத்திய அரசின் பட்ஜெட்டை ஆர்.என்.ரவி பாராட்டியிருந்தார்.