தமிழ்நாட்டிற்கு நிலுவையிலுள்ள டி.எம்.சி., காவிரி நீரை திறந்துவிட வேண்டுமென கர்நாடக அரசுக்கு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் 31ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் தர வேண்டிய 31.24 டி.எம்.சி., நீரையும் உரிய நேரத்தில் திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டது.