தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு பிஎஸ்என்எல் 5G சேவை வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் 5G அறிமுகம் செய்த பிறகு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதைத்தொடர்ந்து, 5G சேவை அடுத்த 6 மாதத்திற்குள் தமிழ்நாடு முழுவதும் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.