தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி மற்றும் கோவையில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு வேளையில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.