தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை என்றும் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றும் அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் திமுகவை தவிர 2-வது டீம் இருக்காது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எந்த டீமும் இருக்காது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் இருப்பவர்கள் திமுகவில் இணைந்து விடும் அளவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நல்லாட்சி கொடுக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.