தமிழ்நாடு, உ.பி.,யில் பாதுகாப்புத்துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன. என்று ஜனாதிபதி முர்மு தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்புத்துறை சார்ந்த ஏற்றுமதிகள் அதிகரித்து வருவதாக பெருமிதத்துடன் கூறிய அவர், ஆயுதம் ஏற்றுமதி செய்யும் உலகின் முதல் 25 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது என்றார். அத்துடன், 2028-29 இல் பாதுகாப்பு ஏற்றுமதி ₹50,000 கோடியை எட்டும் எனவும் தெரிவித்தார்.