தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்தும் சூழல் தற்போது இல்லை என்று மதுவிலக்கு & ஆயத்தீர்வு அமைச்சர் முத்துச்சாமி கூறியுள்ளார். பூரண மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என்பதே அரசின் விருப்பம் எனக் கூறிய அவர், மதுக்கடைகளை மூடுவதில் நடைமுறை சிக்கல்கள் நிறைய உள்ளன என்றார். எனினும், படிப்படியாக மதுக்கடைகளை குறைக்க அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதியளித்தார்.