மத்திய பட்ஜெட் அரசை காப்பாற்றிக் கொள்ள தயாரிக்கப்பட்டுள்ளதாக திமுக எம்பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார். பட்ஜெட் தொடரில் உரையாற்றிய அவர், தமிழ்நாட்டில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடிக்கு, தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க ஏன் மனது வரவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். தனது கூட்டணி கட்சிகளின் மனதை குளிர்வித்து, அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை தொடரும் நோக்கத்தில் பட்ஜெட் இருப்பதாகவும் கூறியுள்ளார்.