படப்பிடிப்புகளில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு கூட்டத்தை கூட்டிய பெப்சி சங்கம், தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 25) அனைத்து படப்பிடிப்புகளை ரத்து செய்துள்ளது. ‘சர்தார் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சண்டை பயிற்சியாளர் ஏழுமலை கீழே விருந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, படப்பிடிப்பின்போது தகுந்த பாதுகாப்புடன் மருத்துவ வசதிகள் அளிக்குமாறு தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.