கடினமான நேரங்களில் கூட இந்தியாவுக்கு சென்று பாக்., அணி விளையாடியதாக அந்த அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார். இந்திய அணி, பாகிஸ்தான் வந்து விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை என கூறிய அவர், பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா வர மறுப்பதை ஏற்க முடியாது என்றார். 2025இல் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாக்.,கில் நடைபெறும் நிலையில், அந்த போட்டிகளில் பங்கேற்க இந்தியா மறுத்துவிட்டது.