தமிழ் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அதிகாலையில் வந்த அதிகாரிகள் நீண்ட நேரமாக தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. படம் மோசடி வழக்கில் ஏற்கனவே ரவீந்தர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.