சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற எச் ராஜா அவர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பற்றி தரகுறைவாக பேசியதாகவும் மிரட்டல் கொடுக்கும் வகையில் பேசியதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆரோக்கியசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து எச் ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் 294, 295 a, 153a, 505/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டங்களில் பேசும் போது அரசு அதிகாரிகளை அவமரியாதையாக பேசுதல், பணி செய்ய விடாமல் தடுத்தல், அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் பேசுதல், மத கலவரத்தை உருவாக்கும் விதத்தில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.