தரவுப் பாதுகாப்பு ஆணையம் அமைப்பது அடுத்த கட்ட முக்கியமான நகர்வாக அமையும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான இணையமைச்சர் ஜிதின் பிரசாதா அறிவித்துள்ளார். தரவு பாதுகாப்பு ஆணையம் அமைப்பது எப்போது? என திமுக எம்பி கனிமொழி கேள்விக்கு பதிலளித்த ஜிதின் பிரசாதா, மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் இந்த சட்டத்துக்கான விதிமுறைகளை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்கியிருக்கிறது. DPDP சட்டத்தின் கீழ் விதிமுறைகள் அறிவிக்கை செய்யப்பட்ட பிறகு, தரவுப் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.