தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் ஓட்டல் புகுந்து இளைஞரை கொலை செய்த வழக்கில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். பிரியாணி ஓட்டலில் வேலை பார்த்துவந்த முகமது ஆஷிக்கை இரு தினங்களுக்கு முன், 4 இளைஞர்கள் வெட்டவெளியில் வெட்டிக்கொன்றனர். இதில் தற்போது கைதாகியிருக்கும் நான்கு பேர் அளித்த வாக்குமூலத்தின்படி, காதல் விவகாரம் பிடிக்காமல் பெண்ணின் சகோதரர்கள் உட்பட 4 பேர் காதலனை கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.