ஆவின் பால் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில் இப்போதைக்கு விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். விலை உயர்த்துவது குறித்து நுகர்வோர்களிடமும் முதல்வரிடமும் ஆலோசித்து வரும் காலங்களில் உயர்த்தப்படலாம் என்றார். மேலும் இந்தியாவில் எங்கும் எந்த அளவு குறைவான விலைக்கு பால் கிடைப்பதில்லை எனவும் எனவே விலையை குறைக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.