மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்தினார். அப்போது மரம் நட வேண்டிய அவசியம் குறித்து பேசிய அவர், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தாயார் பெயரில் ஒரு மரக்கன்று நடும் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். தாமும் தனது தாயார் பெயரில் மரக்கன்று ஒன்றை நட்டுள்ளதாகவும், அதேபோல் நாட்டு மக்களும் நட மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.