கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் பலியாக்கினார்கள். இந்நிலையில் இந்த சம்பவத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு, ரூ.5 லட்சமும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொகை அவர்களுக்கு 18 வயது முடியும் வரை நிலையான வைப்புத் தொகையாக வைக்கப்படும் எனக் கூறியுள்ள அவர், சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு அரசுத் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.