சுமார் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றித் திரிந்த, தாவரங்களை உண்ணும் டைனோசரின் புதைபடிவ எச்சங்கள் இங்கிலாந்தின் வைட் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது சுமார் 900 கிலோ எடையுள்ள பெரிய அமெரிக்க காட்டெருமையின் எடையை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு இறைச்சி உண்ணும் டைனோசரின் எச்சங்கள் இந்த தீவில் கண்டறியப்பட்டது நினைவுகூரத்தக்கது.