பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானி உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிறுநீரகம் தொடர்பான உபாதை காரணமாக கடந்த வாரம் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.