ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக திடீரென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெரியசாமி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.